Tuesday, July 21, 2009

சிங்காரச் சென்னையில் ஒரு போராட்டம்...

நம்மூரு அரசாங்க இயந்திரம் பல இடத்தில் பழுதடைந்து இருப்பது அனைவரும் அறிந்ததே.

துருபிடித்த அதிகாரிகள் பல இடத்திலும் இருந்து கொண்டு, இயந்திரத்தை ஓட விடாமல் முடம் செய்வதையே தங்கள் தினசரி தொழிலாய் செய்து வருகிறார்கள்.

என்ன காரியம் நடக்கணும்னாலும் அவங்களுக்கு ஆயில் போட்டாதான் நடக்கும் என்ற கேவலம்.

இதில் பெருத்த கொடுமை, ஓரளவுக்கு வசதியாய் இருக்கும் பொதுஜனம் எல்லோரும், ரொம்ப மெனக்கெட விரும்பாம, ஆயில் போட்டு போட்டு இயந்திரத்தை பழக்கப் படுத்திட்டாங்க.

சாதாரண ஒரு மேரேஜ் சர்ட்டிஃபிகேட் வாங்கணும்னாலும் கூட, பிச்சை எடுப்பதை போல், கூனிக் குறுகி, ஒவ்வொரு கவுண்டரா அலஞ்சு அலஞ்சு, ஆயில் போட்டு போட்டு, வேலையை முடித்துக் கொள்ள வேண்டிய அவல நிலை.

ட்ரைவிங் லைசென்ஸ் வாங்கணும்னா, சொல்லவே வேணாம், கூஜா தூக்காத குறையா, அதிகாரிகள் பின்னாடி அலையணும்.

வீடு/நிலம் ரெஜிஸ்ட்டர் பண்ணனும்னா, லஞ்சம் இல்லாம ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தின் உள்ளே கூட அனுமதிப்பதில்லை.

இந்த அரசாங்க இயந்திரத்தின் கெட்ட சவகாசமோ என்னமோ தெரியல, இப்பெல்லாம், சில தனியார் நிறுவனங்களிலும் கூட இதே 'துரு' நிலை இருப்பதாய் தெரிகிறது. (BSNL? Airtel?)

சரி, நமக்கு முன்னாடி ஜெனரேஷன் தான், இப்படி துரு பிடிச்சிருக்கு. கழிசடைகள், ஒழிஞ்சு போனா, தானா ஊரு சுபிட்சமாயிடும்னு நெனச்சிட்டு இருந்தா, அவங்களைத் தொடர்ந்து வந்த இளசுகள் கூட, ஆயில் கேட்கும் போதையில் சிக்குண்டு இருக்கிறார்கள்.

ஸோ, கூட்டி கழிச்சு பாத்தா, இப்போதைக்கு நம்ம ஊருக்கு விமோச்சனமே இல்லையோன்னு தோணுது.

நம்ம எல்லாரும், சரியாகர வரைக்கும், இது முற்றுப் புள்ளியில்லாமல் தொடரும். நம்ம வேலைய ஈஸியா முடிச்சுக்க நினச்சு, ஆயில் போட்டுக்கிட்டே இருந்தா, இயந்திரம் அந்தப் பழக்கத்தை மாத்தவே மாத்தாது.

தவறுக்கு துணை நிக்காமல், கொஞ்சமாவது தைரியமா கேள்வி கேட்கப் பழகணும்.

தனியாளா நின்னுகிட்டு, இதெல்லாம் செய்வது கஷ்டம்தான்.

இணையம் இருக்கு, பதிவர் வட்டம் இருக்கு, உங்க அக்கம் பக்கத்தில், like-minded தனி நபர்கள்/குழுக்கள் இருக்கும். இவற்றின் உதவியோடு, அப்பப்ப, ஆயில் போடாமல் வேலையை முடிச்சுக்க முயற்சி பண்ணுங்க.

துரு பிடிச்சிருக்கு, ஆயில் போட்டாதான் வேலை நடக்கும்னு, இயந்திரம் அலம்பு பண்ணா, உப்புக் காகிதம் எடுத்த், துருவை சுரண்டி எடுங்கள். ஆயில் போடவே போடாதீங்க!

Ramesh Sadasivam என்ற பதிவரின், "கிணறு வெட்ட பூதம்" படித்துப் பாருங்கள்.
ரமேஷ், ஆயில் போடாம, உப்புக் காகிதம் போட்டு சுரண்ட ஆரம்பித்திருக்கிறார். சிரமமான வேலையானாலும், இறுதியில் ஜெயம் உண்டாகும்.
முழுவதாக ஜெயம் கிடைக்கலைன்னாலும், கொஞ்சம் துருவாவது சுரண்டி எடுத்த சந்தோஷமாவது கிட்டும்.

சென்னையில் இருப்பவர்கள், 'பெரிய' பதிவியில் இருப்பவர்கள்/இருப்பவர்களைத் தெரிந்தவர்கள், வேறு யோசனை தெரிந்தவர்கள், ரமேஷுக்கு உறுதுணையாய் இருங்கள்.

latest update:
இந்தப் ப்ரச்சனைக்கு ஒரு தீர்வு கிட்டியுள்ளது. ரமேஷ் சதாவிசத்தின் விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டியுள்ளது. மேல் விவரங்கள் இங்கே - http://thirumbiparkiraen.blogspot.com/2009/08/blog-post_27.html