Thursday, August 14, 2008

புகாருக்கு அரசிடம் இருந்து வந்த பதில்

எங்களின் re-laying of roads - breached contracts என்ற பதிவுக்கு பதில் கிடைத்துள்ளது.
ஆனால், இதன் பலன் முழுதாக எப்பொழுது கிட்டும் என்று சொல்லமுடியவில்லை.

பதிலைப் பார்த்தால், ஒரு சாலை போடும் போது, பழைய சாலையை அகற்றிவிட்டு போடுவது என்பது நம்மூரில் வழக்கில் இல்லாத ஒன்றாகத் தோன்றுகிறது.
இப்பொழுதுதான், அந்த முறையை செயல்படுத்த முயன்று வருகிறார்களாம்.

நல்லது நடந்தால் நல்லதுதான். உடனே நடந்தால் மிக்க நல்லது.

புகாரை விசாரித்து பதில் அனுப்பிய சென்னை கார்ப்பரேஷன் நண்பர்களுக்கு நன்றி!

பி.கு: இந்த பதில் yahoo.co.in முகவரியிலிருந்து வந்தது. அது ஏன்னு புரியல்ல. விவரம் தெரிஞ்சவங்க கீழே உள்ளதை படிச்சிட்டு சொல்லுங்க. நன்றி!

Just saw this on Hindu, regarding re-laying :)

and more info here from Times of India

a tender from Chennai corp for cold milling

========== =============== ====================
From

The Superintending Engineer,
Bus Route Roads Department
Corporation of Chennai,
Ripon Buildings,
Chennai 600 003

To
Th.XXXXX, Chennai Tamilnadu,
E.Mail address surveysan2005@yahoo.com

B.R.R.C.No.B4/2444/2008 Dated: .08.2008

Sub: Tamilnadu Chief Minister’s Cell Petition – Petition No.76384/2008 scrap away the existing road and then lay the new road - Regarding.

Ref: 1) Petition from Th.XXXXX, Chennai, Tamil Nadu addressed to Under Secretary, Department of Administrative Reforms and Public Grievance, (5th Floot, Sardar Patel Bhavan, Parliament Street,) New Delhi – 110 001, and endorsement of C.M. Special Cell dt:20.03.2008.

2) GDC.No.G1/13418/2008 dt:12.07.2008.

*********

With reference to the letter cited, it is stated that process of removing the existing wearing course by scrapping, before relaying of road which is known as COLD MILLING PROCESS) has been taken up by Corporation of Chennai this year on main roads on experimental basis. After seeing the results of scrapping, (Cold Milling Process), this method of relaying of roads, after scrapping the existing layer will be taken up in future in other roads also so that the level of road will not raise.


Superintending Engineer/BRR


Copy to
Special Officer,
Special C.M.Cell
Secretariat,
Chennai – 9

Copy to: GD GDC No.G1/13418/2008
“ C.E. (G) for information

======== ========== =========== ============

8 comments:

Anandha Loganathan said...

நல்லது நடக்குதுங்கோ

நீங்க கொடுத்த லிங்க் படிச்சப்புறம் , உங்க வீட்டுகிட்ட எல்லாம் இப்போ scrapping and relaying எல்லாம் இப்போ எல்லாம் நடக்காது போல இருக்கு.

அதுவும் இது ஒரு சோதனை ஓட்டம் தானே தவிர முழுமையான ஓட்டம் இல்லை. அதுவும் இது சென்னையில் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டுள்ளது இன்னும் மற்ற மாநகரங்கள்,மாவட்டங்கள், நகராட்சிகள் , ஊராட்சி என்று வர பல யுகங்கள் ஆகும் போல தெரியுது. நான் தான் ரொம்ப சீக்கிரமா எதிர்பார்க்கிறனோ ??

SurveySan said...

anandha,

உடனே நடக்கும்னு சொல்ல முடியாது.
ஆனால், தொடங்கியிருப்பது வரவேற்க்கத்தக்கது.

அடுத்து, எங்கையாவது, புது ரோடு போடரத யாராவது பாத்தா, அங்க சொறண்டிப் போடராங்களா,அப்படியே போடறாங்களான்னு கவனிச்சு, அப்படியே போட்டாங்கன்னா, stay order வாங்கி, இந்த பெட்டிஷன் விவரங்களைக் காட்டி ஏதாவது பண்ணனும்.

ஒரு இயக்கம் வளர்க்கணும் இந்த மாதிரி விஷயங்களை கவனிக்கவே :)

தருமி said...

ஒரு வசனம் நினைவுக்கு வந்தது:
"பத்த வச்சிட்டியே பரட்டை !"

மகிழ்ச்சி

SurveySan said...

தருமி, பத்திக்கிதான்னு பாப்போம் :)

அப்பப்ப, ஊதி விடவும் வேண்டியிருக்கும்.

ராஜ நடராஜன் said...

விண்ணப்ப பதில்களில் நம்ம அரசு இயந்திரங்களைக் குறை சொல்லவே முடியாது.ஆனால் செயலாக்கம்?

ஆமா தருமிகூட ஏதோ விண்ணப்பம் அனுப்பினார்ன்னு சொன்னாரு.கூடவே நான்கூட ஏதோ கைநாட்டு வச்சதா ஞாபகம்.அதுக்குப் பதில் ஏதாவது வந்ததான்னு அவருகிட்ட கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கோ!

ராஜ நடராஜன் said...

இந்த நேரத்துல எனக்கு இன்னொன்னும் நினைவுக்கு வருது.கணினித் துறையில் இந்தியா முன்னிடமின்னு சொல்லிக்கிறோம்.ரயில்வே ஸ்டேசன்,வங்கின்னு கணினி நல்லாவே இருக்குது.ஆனால் தமிழக அரசுத்துறையில் இன்னும் கட்டு கட்டா பிஞ்சுபோன காகிதங்களையெல்லாம் கயிறு போட்டு கட்டி வெச்சுகிட்டு அலுவலர்கள் வயித்துக்கு நேரா பெரிய பெரிய அந்தக்கால தடித்த கணக்கு நோட்டுகளை வெச்சிக்கிட்டு வேலை செய்யறமாதிரி பாவலா காட்டிகிட்டு ஏன் இருக்குறாங்கன்னு தெரியலை.கொஞ்சம் யாராவது விளக்கம் சொன்னீங்கன்னா நல்லது.

Muniappan Pakkangal said...

Is it going 2 happen,laying of new road without increasing yhe previous height.

SurveySan said...

muniappan,

அது நடப்பதும் நடக்காமல் போவதும், நம் கைவசத்தில்தான் உள்ளது.

எங்கையாவது, அப்படி செய்யாம, இருக்கர ரோட்டு மேலையே அடுத்த ரோட்ட போட்டாங்கன்னா, இந்த பெட்டிஷனை ப்ரிண்ட் எடுத்துக் கொண்டு போய், உங்க காண்ட்ராக்டர்/கவுன்சிலர்/முனீசிப்பாலிட்டி ஆட்களிடம் போய் கேள்வி கேளுங்கள்.

பதிலில்லன்னா, மாநகராட்சி மேயர் கிட்டையோ, கலெக்டர் கிட்டையோ, விஷயத்தை கொண்டு போங்க.
அட்லீஸ்ட், லோக்கல் காவல் நிலையத்திலாவது ஒரு புகார் கொடுக்க முடியுதான்னு பாருங்க.

சும்மா மட்டும் இருந்துடாதீங்க.