Sunday, February 24, 2008

உங்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்

என் பதிவில் இட்ட நாள்: 12/19/2007


இதோ நம் கையில் ஓர் ஆயுதம் என்றொரு தலைப்பில் பதிவொன்று இட்டிருந்தேன். நம் குறைகளை மத்திய அரசின் துறை ஒன்றுக்கு (Dept. of Administrative Reforms & Public Grievances)அனுப்பினால் அதனை நிவர்த்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படும் என்று தெரிந்து அத்துறைக்கு இரு குறைகளைப் பற்றித் தகவல் அனுப்பியிருந்தேன். இதுவரை ஏதும் பதில் இல்லாததால் 'சரி! அவ்வளவுதான்' என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இன்று ஒரு பதில் வந்துள்ளது.

THE WHEELS ARE REALLY TURNING

நான் வழக்கமாகச் செல்லும் ஒரு நெடுஞ்சாலை 'விபத்துப் பகுதி' என்று அறிவிக்கப் பட்டிருந்தாலும் அங்கு தாறுமாறாக விரையும் பேருந்துகளைக் கவனிக்கவோ மட்டுப் படுத்தவோ எவ்வித முயற்சியும் இல்லாமை பற்றியும் அதனால் அடிக்கடி நடக்கும் விபத்துகள் பற்றியும் எழுதியிருந்தேன். இதற்கு வந்த பதில் நம் அரசும், அரசு இயந்திரங்களும் 'உருண்டு கொண்டுதான்' இருக்கின்றன என்ற நல்ல செய்தி மிக்க மகிழ்ச்சி தருவதாக உள்ளது. இன்று எனக்கு வந்த அந்த பதில்:

Reply for your e-mail dated 17.09.2007 about Samayanallur-Paravai-Madurai - Road - Reg.

Kindly refer your e-mail dated 17.09.2007 addressed to Govt. of India.

the Superintendent of Police, Madurai has been requested to instruct
the Highway Patrol Police officials to take immediate action against
drivers who are indulging rash driving in Samayanallur-Paravai-Madurai road.



இதில் மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி என்னவெனில், இன்றுவரை - 19.12.'07 - இத்தளத்திற்குச் சென்று (எட்டிப்) பார்த்தவர்களே வெறும் 1372 பேர் மட்டுமே என்பது கொஞ்சம் ஆச்சரியமாக (வேதனையாகவும் தான்) இருந்தது. இணைய பயனர்கள் மிகுந்து இருக்கும் நம் நாட்டில் இத்தகைய ஒரு நல்ல வசதியை - இணையத்தின் மூலமே நம் குறைகளைக் கூறும் எளிதான இந்த வசதியை - நம்மில் யாரும் பயன்படுத்தாதது ஏமாற்றமே.

என் இரண்டாவதாக முயற்சியாக, மனிதக் கழிவுகள் அகற்றும் வேளை அந்த வேலை செய்து கொண்டிருந்த மூன்று சுத்தித் தொழிலாளர்கள் சென்னையில் இறந்த ஒரு செய்தி பற்றிக் கூறி, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிநிலை மாற அது இயந்திரமாக்கப்பட வேண்டும்; அதற்குரிய முயற்சிகளை ஒவ்வொரு மாநில அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று முதல் கடிதத்தைத் தொடர்ந்து மற்றொரு கடிதமும் ஏற்கெனவே அனுப்பியுள்ளேன். அதற்குப் பதிலும், பதிலைத் தொடர்ந்த காரியமாற்றலும் நடைபெறாதா என்ற எதிர்பார்ப்பில் உள்ளேன்.

நான் பதிவனாக சேர்ந்த புதிதில் இந்த விஷயம் பற்றிய ஒரு நெடும் விவாதம் பதிவுலகில் நடந்தது. பலரும் இதைப் பற்றி எழுதினார்கள். அப்போதே இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது எப்படியென்றெல்லாம் பேசினோம். இதோ இப்போது நம் கண்முன் உள்ள பாதையில் எல்லோருமாக ஒரு படி முன்னெடுத்தால் என்ன?

உங்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்:

சீரியஸ் பதிவு, சீரியல் பதிவு, கும்மிப் பதிவு, மொக்கப் பதிவு என்று வகைவகையாக பதிவுகளைப் போட்டுக்கொண்டிருக்கும் உங்கள் எல்லோருக்கும் என் ஒரு வேண்டுகோள். இயந்திரமாக்கப் படுதல் அவசியம் என் நீங்களும் நினைப்பின் ஏன் ஒரு மயில் இந்த முகவரிக்கு அனுப்பக் கூடாது?(http://darpg-grievance.nic.in)ஒருவேளை எழுத சோம்பேறித்தனப் பட்டால் உதவுவதற்காக நான் ஏற்கெனவே எழுதிய மயிலின் நகலை இங்கே தந்துள்ளேன் - வெட்டி ஒட்ட!

-----------------

It appears we have at last come out of the bracket of 'developing countries' and at the threshold of being among the developed countries. It is a pround moment for every one of us.

BUT how long we are going to make the dalits to clean and carry the human wastes?

A little money and some great will from our politicians and bureaucrats can make this condition completely changed if we introduce machanised system for doing such jobs.

Is it asking too much to request the governemnt to shell out some money for this and liberate the 'harijans' from this job thrusted on them for generations.

2 comments:

Anonymous said...

தமிழிலும் நம் புகார்களை அனுப்ப முடியுமா? இன்னும் சற்று விரிவாக விளக்குங்கள்.please........

SurveySan said...

Selvam,

Nope. unfortunately, the grievance system is monitored in Delhi.

so, English only.