சாராயக் கடைகளின் கேடு பற்றி இப்போது அடிக்கடி போராட்டங்கள், விண்ணப்பங்கள் என்று தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பக்கத்து வீடு கேரளாவில் முழுவதுமாக குடிக்கடைகளை நிறுத்துவது பற்றி ஆவன செய்து கொண்டிருக்கின்றது. ( யார் கண்டது ... அந்தக் கூட்டமெல்லாம் இனி டாஸ்மாக் பக்கம் வந்து வரிசையில் நிற்கப் போகிறதோ என்னவோ...!) நான் டாஸ்மாக்கை விட அதிகம் அஞ்சுவது பக்கத்திலிருக்கும் பார்களை. அதுவும் அவர்கள் வண்டிகளை நிறுத்தும் இடத்திற்கு அருகில் இரு முறை நின்ற அனுபவமும் உண்டு - பக்கத்திலிருந்த ப்ரோட்டா கடையில் நின்ற அனுபவம் தான். அதில் இரு குடிமகன்கள் வண்டி எடுத்த ‘கண் கொள்ளா காட்சியைக் காணும் அனுபவம்’ ..... வண்டி எடுக்கும் போதே இன்று எத்தனை பேரை இவன் சாய்ப்பானோ என்றே தோன்றியது.
இரண்டாவதாக, பார் வைத்திருப்பது இரட்டிப்பு சந்தோஷம் மக்களுக்கு. யார் வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் குடித்துக் கொள்ளலாம் என்ற “சுதந்திரம்” குடிமக்களுக்கு.
நானும் குடிப்பேன் என்பதால் குடியை ஒழிக்க வேண்டும் என்பதற்கு எதிராக இருக்க மாட்டேன். ஆனால் இந்த “சுதந்திர குடி” எளிதாய் ஒழிக்கக் கூடியது. அதில் நிச்சயமாக பலருக்கு ஏற்படும் தடையால் அவர்களது குடி குறையும். நிச்சயமாக விபத்துகள் குறையும் என்று உறுதியாக நம்புகிறேன். ஏற்கெனவே தமிழ்நாட்டில் தான் விபத்துகள் அதிகம் என்ற செய்தி மனதை உறுத்துகிறது. பார்களை எடுத்தால் குடியை நிறுத்த முடியாது. ஆனால் நிச்சயமாக குறைக்க முடியும். அரசுக்கும் காசு நட்டம் ஏதும் கிடையாது.
மது விலக்கிற்கு எதிரான சிறிய ஆனல் முதல் படியாக இது இருக்கட்டுமே!
ஆகவே தமிழ்நாட்டு அரசுக்கு ஒரு விண்ணப்பம் எழுதியுள்ளேன். நம்பினால் ஓட்டளியுங்கள். அதோடு இதே விண்ணப்பத்தை உங்கள் பதிவிலும் பதிப்பித்து மேலும் இச்செய்தி பலரையடைந்து, விண்ணப்பத்திற்கு நிறைய கையெழுத்து வர உதவ கேட்டுக் கொள்கிறேன்.
Please join this campaign:
https://www.change.org/p/tamil-nadu-ministerial-cabinet-close-down-the-bars-in-all-tasmac-shops?recruiter=5035702&utm_campaign=mailto_link&utm_medium=email&utm_source=share_petition
இரண்டாவதாக, பார் வைத்திருப்பது இரட்டிப்பு சந்தோஷம் மக்களுக்கு. யார் வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் குடித்துக் கொள்ளலாம் என்ற “சுதந்திரம்” குடிமக்களுக்கு.
நானும் குடிப்பேன் என்பதால் குடியை ஒழிக்க வேண்டும் என்பதற்கு எதிராக இருக்க மாட்டேன். ஆனால் இந்த “சுதந்திர குடி” எளிதாய் ஒழிக்கக் கூடியது. அதில் நிச்சயமாக பலருக்கு ஏற்படும் தடையால் அவர்களது குடி குறையும். நிச்சயமாக விபத்துகள் குறையும் என்று உறுதியாக நம்புகிறேன். ஏற்கெனவே தமிழ்நாட்டில் தான் விபத்துகள் அதிகம் என்ற செய்தி மனதை உறுத்துகிறது. பார்களை எடுத்தால் குடியை நிறுத்த முடியாது. ஆனால் நிச்சயமாக குறைக்க முடியும். அரசுக்கும் காசு நட்டம் ஏதும் கிடையாது.
மது விலக்கிற்கு எதிரான சிறிய ஆனல் முதல் படியாக இது இருக்கட்டுமே!
ஆகவே தமிழ்நாட்டு அரசுக்கு ஒரு விண்ணப்பம் எழுதியுள்ளேன். நம்பினால் ஓட்டளியுங்கள். அதோடு இதே விண்ணப்பத்தை உங்கள் பதிவிலும் பதிப்பித்து மேலும் இச்செய்தி பலரையடைந்து, விண்ணப்பத்திற்கு நிறைய கையெழுத்து வர உதவ கேட்டுக் கொள்கிறேன்.
Please join this campaign:
https://www.change.org/p/
1 comments:
sorry, i went into a hibernation for long. will try to shake this blog up soon :)
Post your comments