*
28.செப்டம்பர் மாதம் 2007-ம் வருடம், அதாவது ஐந்தரை ஆண்டுகளுக்கு முன், மனிதக் கழிவுகளை மனிதன் தூக்கும் அவலைத்தை நிறுத்த மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் வாங்கி, பரம்பரைத் தொழிலில் தவிக்கும் தலித்துகளை இத்தொழிலிலிருந்து தடுக்க வேண்டும் என்று மத்திய அரசால் நடத்தும் Grievance Cell பக்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினேன்.
இன்று அதற்குப் பதில் வந்துள்ளது ....
ஆச்சரியம் .. ஐந்தரை ஆண்டுகள் நமது வேண்டுகோள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.
ஆச்சரியம் .. ஐந்தரை ஆண்டுகள் ஆனாலும் ஒரு பதில் கொடுத்துள்ளார்கள்.
பல தடவை நீதி மன்றங்கள் இவைகளைத் தடுத்தாலும் அந்த பழக்கம் இன்னும் மாறியதாகத் தெரியவில்லை.
இப்போதும் நீதி மன்றங்கள் தடை செய்து விட்டன. ஆனால் சுத்தம் செய்ய இயந்திரங்களை அரசு வாங்கி பழக்கத்திற்கு கொண்டு வந்து விட்டதா? தெரியவில்லை.
ஆயினும் .. இந்த கேஸ் இப்போது முடிவடைந்து விட்டது என்ற செய்தி வந்துள்ளது.
|
Your Grievance with Registration No
: DARPG/E/2007/06791 has been disposed . Logon to : http://pgportal.gov.in/
for further details.
Current Status
|
:
|
CASE CLOSED
|
Date of Action
|
:
|
12 Feb 2013
|
Details
|
:
|
Clean and carriying human waster by men is prohibited by the Court. Hence those
in such occupation are provided bank loan and training for other occupation
vide lr.27458/ADW6/2011, dt.29.11.2010
*
இந்த பதிலைப் பார்த்து மகிழுவதா .. அல்லது நல்லது ஏதும் இன்னும் நடக்கவில்லை என்று வருந்துவதா ....????
*
இன்னொரு சோகம்... நண்பர்கள் சிலர் சேர்ந்து 2008-ம் ஆண்டு FIX MY INDIA என்று ஒரு பதிவை ஆரம்பித்தோம். அதுவும் தூங்கி விட்டது.
யாராவது எழுப்பினால் நலம் ....
*
சின்ன சிறு குறிப்பு:
carriying human waster by men - இப்படி பதில் எழுதுவோர் ஆங்கிலத்தை இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து எழுதி அனுப்பலாம்.
|
0 comments:
Post your comments